Homeபிற செய்திகள்சாலையில் நின்றிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

சாலையில் நின்றிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே சி.எஸ்.ஐ சர்ச் வளாகத்தை ஒட்டி இருந்த மரத்தின் கிளை ஒன்று பலத்த காற்றால் முறிந்து விழுந்தது.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததால் கார் சேதமடைந்தது. சாலையில் மரம் முறிந்து விழுந்த சூழலில், அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புத்துறைனருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இயந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img