Homeபிற செய்திகள்கோவை லிஸ்யு மெட்ரிக் பள்ளி கண்காட்சியில் கண்கவர் ஓவியங்கள்

கோவை லிஸ்யு மெட்ரிக் பள்ளி கண்காட்சியில் கண்கவர் ஓவியங்கள்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள லிஸ்யு மெட்ரிக் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நடை பெற்றது.

பள்ளி வளாகத்தில் உள்ள யோகா அரங்கில் நடை பெற்ற இதில், இடம்பெற்றிருந்த கண்கவர் ஓவியங்கள் மாணவர்களை மிகவும் கவர்வதாக இருந்தன. மாணவர்களுக்கு ஓவியம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

கருப்பு நிறத்திலான, பால் பாய்ண்ட் பேனாவால் வரையப்பட்ட இந்த சாதனை ஓவியங்களுக்கு இந்தியன் சாதனை பதிவு புத்தகமான (INDIAN BOOK OF RECORDS) ஆசிய சாதனை புத்தகமான (ASIAN BOOK OF RECORDS)ஆகியவை விருதுகள் அளித்து மகுடம் சூட்டியிருக்கிறது.

முன்னதாக, ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்த பள்ளி முதல்வர் அருட்தந்தை பால் தெக் கினியத் அஜிதா கலாதரன் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாலக்காடு பாரதமாதா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகத்தி னருக்கும் லிஸ்யு பள்ளி நிர்வாகம் நன்றியை தெரி வித்தது.

படிக்க வேண்டும்

spot_img