fbpx
Homeபிற செய்திகள்கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் - 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு: மு.க.ஸ்டாலின்...

கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் – 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது

கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட் டில் ரூ34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..

இதன் மூலம் 74 ஆயிரத்து, 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கோவை கொடிசியா வளாகத்தில் தொழில்துறை முதலீட்டாளர்களின் முதல் முகவரி மாநாடு இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரேஸ் கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து, அவினாசி சாலை வழியாக கொடிசியா வந்தார்.

அப்போது, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா, பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ் உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுகிலும் கழக தொண்டர்கள் மேள தாளம் முழங்கவும், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்றவைகளை கொண்டும், பூரண கும்ப மரியாதையுடன் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், சிஆர்.இராமச்சந்திரன், பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, டாக்டர். வரதராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் இந்த உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் கொடிசியாவில் மு.க.ஸ்டாலின் தலைமையில், தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், 34,723 கோடி ரூபாய் முதலீட்டில் 74,835 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 485 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,960 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில், 7 வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னி லையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஆக மொத்தம், ரூ.35,208 கோடி ரூபாய் முதலீட்டில், 76,795 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும், 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

டிட்கோ நிறுவனம் தயாரித்துள்ள மாநிலத்தில் உள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு ஒன்றினையும் முதல்வர்மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

ஒவ்வொரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன், தொடர்பு விவரங்கள், உற் பத்திப் பொருட்களின் விவரம், சோதனைக்கான வசதிகள், ஆராய்ச்சி நிலையங்கள், முதற்கட்ட தொழில் பாதுகாப்பு பூங்காக்கள், அரசு வழங்கும் மானியங்கள் போன்ற விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் தங்களது வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இக்கையேடு முதலாம் மற்றும் இரண்டாம் அடுக்கு நிறுவனங்களுக்கும் OEM நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு, விநியோகச்சங்கிலி பலப்படுத்திட உதவிடும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறை களுக்கான உற்பத்தியை மேம்படுத்த ஒரு திறன்மிகு மையத்தினை டிட்கோ நிறுவனம், திருவாளர் டசோ சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவ உள்ளது.

212 கோடி ரூபாய் முதலீட்டில் மேற் கொள்ளப்பட உள்ள, இத்தி றன்மிகு மையம், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி மேம்பாடு, புரோட்டோ டைப்பிங், திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல் திறன்களை வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழி லகங்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் வழங்கும்.

மேலும், இதன் மூலமாக, தமிழகத்தில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறையில் புதிய தொழில் முனை வோர்களை உருவாக்குவதுடன், ஏற்கனவே இயங்கி வரும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கும் பணியா ளர்களின் செயல்திறனை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் பரிமாற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் 13,413 கோடி ரூபாய் முத லீட்டில் 11,681 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் 3,928 கோடி ரூபாய் முதலீட்டில் 3,944 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 10 திட்டங்களின் வணிக உற்பத்தியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

மேற்கூறிய 82 திட்டங்களின் மூலம் 52,549 கோடி ரூபாய் முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கிட வகை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப் பேட்டை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருச்சி ராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களில் முதலீடுகள் பரவலாக மேற் கொள்ளப்பட உள்ளன.

2021-22 ம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவுத்திட்ட உரையில் அறிவித்தவாறே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதிநுட்பத் துறை வளர்ச்சிக்கு ஏதுவாகவும், மேம்பட்ட நிதிநுட்ப (Fintech) நிறுவனங்களின் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்திடும் வகையிலும் “தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை 2021’’ யை வெளியிட்டார்கள்.

மேலும், சென்னையில் நிதி நுட்ப நகரம் (Fin Tech City). இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில், நியோ டைடல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற பல சிறப்பம்சங்கள் இக்கொள்கையில் இடம் பெற்று உள்ளன.

மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணைய தளம் 2.0 வின் கைபேசி செயலியை அவர் துவக்கி வைத்தார். தற்போது உள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட் டாளர்களுக்கும் உதவிடும் வகையில், இக்கைபேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மேற்கொள்ளுதல், அனுமதிகள் பற்றிய தகவல்கள், அனு மதிகளின் நிலை தனைக் கண்காணித்தல், தெளிவுகள் / சந்தேகங்கள் எழுப்புதல் போன்ற சிறப்பம்சங்கள் இந்தச் செயலியில் இடம் பெற்றுள்ளன.

கொடிசியா அமைப் பின் பொன்விழா நிறைவை ஒட்டி ஒரு காலப் பேழை புத்தகம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரகத் தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொதுப்பணித் துறை அமைச்சர் .எ.வ.வேலு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், கு.சண்முகசுந்தரம், மாநி லங்களவை உறுப்பினர் அந்தியூர்செல்வராஜ், சட்ட மன்ற உறுப்பினர்கள், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் (ம) மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, கோவை மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர், வேணு சீனிவாசன், பண்ணாரியம்மன்குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பால சுப்ரமணியம், ஜிஆர்ஜி நிறுவனங்களின் பிஎஸ்ஜி குழும தலைவர் மற்றும் நிறுவன அறங்காவலர் நந்தினி ரங்கசாமி, டெய்சல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், யோஷிபூமி டகாசே மற்றும் கொடிசியாவின் தலைவர் ரமேஷ் பாபு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img