fbpx
Homeபிற செய்திகள்கோவை தெற்கு மண்டலத்தில் தூய்மைப் பணி மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு

கோவை தெற்கு மண்டலத்தில் தூய்மைப் பணி மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.93-க்கு உட்பட்ட குனியமுத்தூர், ரங்கசாமி நாயுடு நகரில் மழைநீர் வடிகாலை தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தரவிட்டார். பழுதடைந்த சாலையை உடனடியாக செப்பனிட பொறி யாளருக்கு உத்தரவிட்டார்.

குனியமுத்தூர் – பாலக்காடு சாலை, இடையர்பாளையம் பிரிவு பகுதியில் ஆய்வு செய்து, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். சாலையோரங்களில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிடவும், வார்டு எண்.92க்கு உட்பட்ட பாலு கார்டன் பகுதியில் மழைநீர் வடிகாலை புனரமைத்து மழைநீரை வெளியேற்ற பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பாலு கார்டன் பகுதியில் குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விநாயகர் கோயில் பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

கோவைப்புதூர் பிரிவு, இ.பி. காலனி பகுதியில் உள்ள கால் வாயை 850 மீட்டர் தூர்வாரும் பணி முடிவுற்றது. பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண் டுவர நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்பகுதியில் 942 மீட்டர் தொலைவிற்கு, ரூ.51.74 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை பணி நடக்கிறது. அதை ஆய்வு செய்து தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

குனியமுத்தூர் பகுதி, மாந கராட்சி பள்ளியை பார்வையிட்டு, கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் கட்ட உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெற்று விரைவில் பணிகளை மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தில் குமார், இளஞ்சேகரன், உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் இராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img