கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, கிழக்கு மண்டலம் வார்டு எண்.32க்குட்பட்ட விளாங்குறிச்சி, சேரன்மா நகர் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளான அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவது கொசுப்புகை மருந்து அடிப்பது, தேவையற்ற பொருட்களை அகற்றுவது போன்ற பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டபோது எடுத்தபடம்.



