கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின்கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகளின் ஒருபகுதியாக தாமஸ் பார்க் பகுதியில் அமையவுள்ள தீவுத்திடல், பூங்கா மற்றும் பெண்கள் கழிவறை கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் முனியம்மாள், பொது மேலாளர் (ஸ்மார்ட் சிட்டி) பாஸ்கரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் ஆகியோர் உள்ளனர்.



