குன்னூரில் உயிரிழந்த ராணுவ வீரர் ஒருவரது உடல் கோவை கொண்டுவரப்படுகிறது. குன்னூரில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உட்பட 13 பேர் பலியாகினர்.
இதில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் பிரதீப் என்பவரும் உயிரிழந்தார்.
தற்போது டெல்லியில் உள்ள அவரது உடல் அவரது சொந்த ஊரான திருச்சூருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
இதற்காக விமானம் மூலமாக கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
காலை 11 மணியளவில் சூலூர் விமான படை தளத்திற்கு வரும் அவரது உடல் இங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சூர் கொண்டு செல்லப்பட உள்ளது.
உயிரிழந்த பிரதீப்பிற்கு மனைவி, 7வயது மகன், இரண்டரை வயது மகள் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



