கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்கள், வாக்குப் பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு மற்றும் முன் னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டார்.
ஆட்சியர் தெரிவித்ததா வது: கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 195 வார்டுகளில் 339 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 135,725 ஆண் வாக்காளர்களும், 148,874 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 20 இதர வாக்க £ளர்களும் ஆக மொத்தம் 284,619 வாக்காளர்களும் உள்ளனர்.
நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 12 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் 10 அமைப்புகளுக்கு முதல் கட்டமாகவும், 2 நகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும், தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தம் 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமையப் பெற உள்ளன. அவற்றை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களை தரை தளத்திலும், வாக்குப்பெட்டிகள் உள்ள பாதுகாப்பு அறை வாக்கு எண்ணிக்கை மையத்தின் அருகாமையில் அமைக் கவும் சம்பந்தப்பட்ட தேர் தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சிக்கு வாக்கு எண்ணும் மைய மான தாந்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி, குளித்தலை நகராட்சிக்கு குளித்தலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மருதூர், நங்கவரம், கிருஷ்ணராயபுரம் மற்றும் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிகளுக்கு, மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வளாகம், புலியூர் மற்றும் உப்பிடமங்கலம் பேரூ ராட்சிகளுக்கு புலியூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி, புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தரவடிவேல், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எம். லீலாகுமார், குளித்தலை நகராட்சி ஆணையர் சுப்புராம், குளித்தலை, புகலூர், அரவக்குறிச்சி வட்டாட்சியர்கள், பேரூ ராட்சிகளின் செயல் அலுவலர்கள் இருந்தனர்.



