ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழா – 2021ல் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
உடன் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்) சண்முகவடிவு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.



