கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி, மற்றும் 7-வது வட்ட கழகத்தின் சார்பில் இடையர் பாளையம் பகுதியில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை திமுகவினர் இன்று உற்சாகமாக கொண்டாடினர்.
கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை தாங்கி நடத்தினார். சிறுவர்களுக்கு, நோட்டு, புத்தகங்கள், எழுது கோல்களை வழங்கினார்.
பேரறிஞர் அண்ணா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது, அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க பட்டது.
சுமார் 500 பேருக்கு நிவாரண தொகுப்புகளான அரிசி, சர்க்கரை, பருப்பு, ஆயில் போன்ற 7 வகை மளிகை பொருட்கள் வழங்கப் பட்டன
கவுண்டம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மதியழகன், 7-வது வட்ட கழகச் செயலாளர் ஆர், குமரேசன், மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர்கள் கே.எம்.சுந்தரம், ஆர்சி தியாகராஜன், ஜவகர் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஆ.நாகராஜ், சுப்ரமணியம், சசிபாபு, வட்ட கழகச் செயலாளர்கள் தமிழ் செல்வன், வெற்றிவேல், தன்ராஜ், குட்டி(எ) வேலுச்சாமி, மாவட்ட அணி அமைப் பாளர்கள் மைக்கேல், மாலதி, சண் முகம், கணேஷ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.



