fbpx
Homeபிற செய்திகள்கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி

கோவையில் யமஹா நிறுவனத்தின் பிரம்மாண்ட ‘டிராக் டே’ நிகழ்ச்சி

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், கோவையில் உள்ள கோஸ்ட் உயர் செயல்திறன் மையத்தில் தனது வாடிக்கையாளர்களுக்காக டிராக் டே என்ற பிரத்யேக நிகழ்ச்சியை நடத்தியது. யமஹாவின் தி கால் ஆஃப் தி ப்ளூ பிராண்ட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட யமஹா வாகன ஓட்டிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி யில் ஆர்.15, எ.டி 15 மற்றும் எக்ஸ்.எஸ்.ஆர் 155 ஆகிய வாகனங்களின் உரிமை யாளர்கள் பங்கேற்றனர்.


இவர்களுக்கு, மோட் டார் சைக்கிளைக் கட்டுப் படுத்துதல், வளைவுகளில் வாகனத்தைச் சரியாக ஓட்டு தல் மற்றும் பாதுகாப்பான ஓட்டுதல் முறைகள் குறித்து நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஓட்டிகளை ஒன் றிணைக்கும் இந்த பயணம், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நிலப்பரப்பைக் கொண்டா டும் ஒரு அடையா ளப்பயணமாக வடிவமைக் கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img