fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை: புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை: புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை தடுக்க, கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற பின், சைலேந்திர பாபு நேற்று கோவை வந்தார். மாநகர காவல் அலுவலகத்தில் அவருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரி யாதை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கு மண் டல காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசும்போது, “ கஞ்சா மற்றும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்ப னையை தடுக்க கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

சமூகத்துக்கு கேடு விளைவிக்கும், குற்ற ங்கள் செய்யத் தூண்டும் இத்தகைய பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கு மண்டலத்துக் குட்பட்ட மாவட்டங்களில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகர காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் தங்களது எல்லைக் குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள் ளிட்டோருடன் கலந்து பேசி, பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற் றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்“ என்றார்.

இக்கூட்டத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம். தாமோர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வே.வனிதா, மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மற்றும் சேலம் சரக டிஐஜிக்கள், 8 மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வழக்குகளை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ரொக்கப் பரிசை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img