fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பொது உலகளாவியபல்கலை. கல்விக் கண்காட்சி

கோவையில் பொது உலகளாவியபல்கலை. கல்விக் கண்காட்சி

கோவை எஸ்எஸ்விஎம் கல்வி குழுமம் சார்பில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகவும், பெற்றோருக்களுக்காகவும் முதல் பொது உலகளாவிய பல்கலைக்கழகக் கண்காட்சி நடந்தது.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களில் ஒன் றான எஸ்எஸ்விஎம் வோல்ட் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வருகைத் தந்து, உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கியது. அத்துடன் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையிலும் அறிவுரைகள் வழங்கின.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிபர் மற்றும் சர்வதேச பாடத்திட்டத்தின் தலைவர் டாக்டர் வேணுநாதன் பிள்ளை வருங்கால மாண வர்களுக்கு இந்த உயர்கல்வி குறித்த விளக்கங்களையும், முக்கியத்துவத்தையும் கூறினார்.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகையில், கலையரங்கத்தில் அமைந் திருந்த ஒவ்வொரு கண் காட்சியகமும் மிகச்சி றப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட் டிருந்தது.

மாணவர்களின் தனித்திறனை இனம் கண்டு வெளிக்கொணரும் வகையில் கல்லூரிகளின் கண்காட்சியகங்கள் அமைக்கப்பட்டிருந்தது பாராட்டுதலுக்குரியது. இப்பல்கலைக்கழகங்களின் மற்றும் கல்லூரிகளின் கல்வி முறைமைகளை எவ்வகையிலேனும் நீங்கள் ஆய்வு செய்யலாம் என்றார்.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிர்வாகச் செயலாளர் மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் ஸ்ரீஷா நித்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img