fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பி.எஸ்.ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி- 3ம் தேதி முதல் 5 நாட்கள்...

கோவையில் பி.எஸ்.ஜி கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி- 3ம் தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது

கடந்த 55 ஆண்டு களாக பி.எஸ்.ஜி ஸ்போர் ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 56வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2022 ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகின்றது.

இது குறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் பிஎஸ்ஜி ஸ்போ£ர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பழ னிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இவ்வாண்டு 56வது ஆண்கள் பி.எஸ்.ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பி.எஸ்.ஜி கோப்பை ஆண்கள் அணியில் பஞ்சாப் போலீஸ் அணி& பஞ்சாப், இந்திய கப்பல் படை அணி& லோனா வாலா, இந்தியன் வங்கி அணி& சென்னை, ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் அணி- சென்னை, ஒருங்கிணைந்த ரயில்வே தொழிற்சாலை அணி (ஐசிஎப்) சென்னை, கேரள மாநில மின்சார வாரிய அணி- கேரளா, கேரள போலீஸ் அணி- கேரளா மற்றும் பேங்க் ஆப் பரோடா& பெங்களூரு ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000 மற் றும் பி.எஸ்.ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20,000.00 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ.15,000 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000 பரிசாக வழங்கப்படும்.

மேற்கண் டவாறு அவர்கள் கூறினார்கள்.
போட்டிகள் வரும் 3ம் தேதி முதல் தினமும் மாலை 5 மணிக்கு துவங்கும். இப்போட்டிகளை பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி சிறப்பு விருந் தினராக கலந்து கொ ண்டு துவக்கி வைக்கிறார். பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூ ரியின் முதல்வர் டாக்டர். கே.பிரகாசம் முன்னிலை வகிக்கிறார்.

ஆகஸ்டு 7ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கோவை மாவட்ட கலெக் டர் ஜி.சமீரன், பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோ பாலகிருஷ்ணன், சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலை வருமான ஜி.செல்வராஜ் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பரிசு களை வழங்க உள்ளார்கள்.

படிக்க வேண்டும்

spot_img