ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் (03.10.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள நான்காம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏகம் ஜெ.சிங், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி உட்பட பலர் உள்ளனர்.



