fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி- ஐஇடிஇ புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி- ஐஇடிஇ புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.பி.ஆர் .கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ், ஆங்கிலத் துறையானது சென்டர் ஃபார் இன்டர்நேஷனல் அஃபேர்ஸ் உடன் இணைந்து, தி இன்ஸ் டிடியூட் ஆஃப் எலக்ட் ரானிக் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியர்ஸ் (ஐஇடிஇ -பெங்களூர்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வணிகவியல் துறை முதன்மையர் முனைவர் கு.குமுதாதேவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர்செ. பாலுசாமி தலைமை தாங்கி பேசினார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தையும் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர்களின் கேம்பிரிட்ஜ் மதிப்பீட்டு மையத்துடன் இணைந்து மாணவர்களுக்கு மொழித்திறன் குறித்த சான்றிதழ் படிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

புரிந்துணர்வு ஒப்பந் தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஐஇடிஇ (I.E.T.E)
-ன் இயக்குநர் ஷேக்வஜீத்பாஷா சிறப்புரையாற்றினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் மொழித் திறன் தேர்வு மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான பயிற்சிகளை விவரித்தார்.

முதல்வர் செ.பாலுசாமி , ஷேக்வஜீத்பாஷா, கேம் பிரிட்ஜ் மதிப்பீட்டு மையம், ஐ.இ.டி.இ, கல்லூரி ஆலோசகர் டாக்டர் ச.ராமச்சந்திரன் மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் கே.விஜயகுமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் வி.ஹரி பிரசாத் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img