fbpx
Homeபிற செய்திகள்கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு

கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு: முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான ஒப்புதல் கடிதத்தை முன்னாள் மாணவர் சங்கத்தினர், முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமாரிடம் வழங்கினர்.

நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1987-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இங்கு படித்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடங்கி, கல்லூரிக்கும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கும் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

முன்னாள் மாணவர்கள் பலர் தொழில் முனைவோர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். அவர்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.

இவர்கள் கோவை யில் 9 நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்நிறுவனங்களில் பணிபுரிய, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளனர்.

இதன்படி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஜன.31-ம் தேதி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.எல்.சிவக்குமாரிடம், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் ஆர். பிரபு, வேலைவாய்ப்பு ஒப்புதல் கடிதம் வழங்கினார்.

இதன்மூலம் பிளாட் டோ அகாடமி, சுரபி புல்லியன், மெகா எண் டர்பிரைசஸ், ஆர்.பி. ஏஜென்சீஸ், சிந்தியா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ், ஆர்.வி.எஸ். ஏª ஜன்சீஸ், பௌபௌ பிளஸ், பிரேம்கண்ணா கேட்டரிங் அண்டு எக்யூப்மென்ட்ஸ், ஐ.டி. வேர்ல்டு ஆகிய நிறுவனங்களில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img