fbpx
Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 750 படுக்கைகளுடன் பொது மருத்துவமனை திறப்புவிழா

கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 750 படுக்கைகளுடன் பொது மருத்துவமனை திறப்புவிழா

தென்னிந்தியாவின் முன்னணி பல்துறை மருத்துவமனைகளில் ஒன்றான கேஎம்சிஹெச் மருத்துவமனை2019-ம் ஆண்டு தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு மருத்துவக்கல்லூரியைத் துவக்கியது.

இதில் தற்போது 300 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதியுடன் புதிய பொது மருத்துவமனை அனைத்து நவீன வசதிகளுடன் துவக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் கேஎம்சிஹெச் மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லஜிபழனிசாமி இப்புதிய பொது மருத்துவமனையைத் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் டாக்டர் அருண்என்பழனிசாமி முன்னிலை வகித்தார்.

விழாவில் இயக்குநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் டாக்டர் நல்லஜிபழனிசாமி பேசுகையில் , கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இம்மருத்துவமனை வசதி குறைவான ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் என்றும் 30 ஆண்டுகால மருத்துவ சேவை பயணத்தில் இதுமற்றுமொரு சாதனையாக திகழ்கிறது என்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகள் கிடைத்திட கேஎம்சிஹெச் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்றும் தெரிவித்தார்.

750 பொதுபடுக்கை வசதிகொண்ட இப்புதிய பொதுமருத்துவ மனையில் 50 படுக்கைகள் பல்வேறு தீவிரசிகிச்சை பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

30 படுக்கைகள் அவசரகால மற்றும் விபத்து சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும்11ஆபரேஷன் தியேட்டர்களும் உள்ளன.

இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகள் அனைத்தும் ஓரிடத்திலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காக சிடிஸ்கேனர், எம்ஆர்ஐ, கேத்லேப், அல்ட்ராசவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற நவீன மருத்துவ கருவிகளுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆப்ரேஷன் தியேட்டர்கள்
முதலான அதிநவீன மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி பொதுமருத்துவமனை பொதுமக்கள் வசதிக்காக 24மணிநேரமும் செயல்படும். அவிநாசி சாலையில் இருந்து தனிவழி அமைக்கப்பட்டுள்ளது.

கே.எம்.சி.ஹெச் பிரதான மருத்துவமனையில் இருந்து தனித்து செயல்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ சேவைகளைப் பெற்றுபலன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img