fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி பையனப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் எதிரில், டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒரகடம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த துளசி தாஸ் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற் சங்க மாநில துணை செயலாளர் நாகராஜ் தலைமை வகித்தார்.

இதில் அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் அப்துல்கலீல், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட தலைவர் மாதப்பன், மாவட்ட பொருளாளர் சபாபதி, சிஐடியூ மணி, சரவணன், தொமுச மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாநில செயலாளர் சஞ்சீவன், மாவட்ட செயலாளர் சக்திவேலர், மாவட்ட பொ ருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டனவுரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img