கே நடுஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடந்தது இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அப்பா மணி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சார் ஆட்சியர் சித்ராவிஜயன், தாசில்தார் ராஜராஜன், வட்ட வழங்கல் அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊராட்சியில் வரவு செலவு கணக்குகள் ,ஜல்சக்தி அபியான், திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் வழங்குதல், கொரோனா தடுப்பு சிறப்பு பணிகள் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் சிக்கனமாக மேற்கொள்ளுதல் கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், குழந்தைகள் திருமணம் தடுத்தல் உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இருசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் முருகன், துணைத் தலைவர் லதா கோவிந்தராஜ், விஏஓ முருகன், ஊராட்சி செயலர் சர்க்கரைவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செல்லியம்பட்டி ஊராட்சி கடுக்காய் கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி தலைவர் ராஜா, ஊராட்சி செயலர் சுமதி, மற்றும் துணைத்தலைவர் ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சாலை வசதிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, மற்றும், நூலக வசதி, குழந்தை திருமணம் தடுப்பது, கொரோனா தடுப்பு ஊசி அனைவரும் போட்டுக் கொள்வது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



