fbpx
Homeபிற செய்திகள்உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: விஸ்வ ஜன முன்னேற்றக் கழகம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: விஸ்வ ஜன முன்னேற்றக் கழகம் அறிவிப்பு

விஸ்வஜன முன் னேற்றக் கழக நிறுவனர் வேல்முருகன் தலைமை யில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில  தலைவர் பாபுராஜ், பொதுச்செயலாளர் வேலுகண்ணன், அமைப்புத் தலைவர் ரவி, பொ ருளாளர் கண்ணன் ,மகளிர் அணி தலைவர் ஜோதிமணி காமாட்சி  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய் தியாளர்களுக்கு வேல் முருகன்  பேட்டி அளித் தார்.
அப்போது அவர் கூறியதாவது

நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டத்திலும் மற்ற மாவட்டங்களில் இருக்கக் கூடிய ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலிலும் திமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு விஸ்வஜன முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் விஸ்வ கர்மா மக்கள் அனைவரும் தவறாமல்  திமுக கூட்டணி கட்சிகளும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

விஸ்வ கர்மா மக்க ளின் வளர்ச்சி குறித்து தமிழக முதல்வரிடம் 10 அம்ச கோரிக்கைகளை தேர்தலுக்கு முன் விஸ் வஜன முன்னேற்ற கழகத்தின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் அதை நிறைவேற்ற வேண்டுமென் று முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஸ்வகர்மா மக்கள் அனைவரும் தவறாமல் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீர் மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img