கொரோனா பெருந் தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது.
இதுகுறித்து காவேரி கூக்குரல் இயக்கத் தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன் கூறிய தாவது: காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 2019ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இதற்காக அவர் தலகாவேரியில் இருந்து திருவாரூர் வரை பைக் பயணம் மேற்கொண்டு மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் (2020, 2021) தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 2.1 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
அத்துடன், இயற்கை முறை யில் மரக்கன்றுகளை உற் பத்தி செய்வதற்காக 32 நர்சரிகள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, விவசாயிகளிடம் இருந்தே மரக்கன்றுகளை நேரடியாக கொள்முதல் செய்யும் விதமாக அவர்களுக்கு நர்சரி தொடங்குவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
விவசாயிகளை நேரில் சந்தித்து பேச 890 கிராமபுற இளைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இத்திட்டத்தை சமூக வலைத்தளங்களின் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதில் சுமார் 20 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 128 விவசாய வாட்ஸ் அப் குழுக்கள் செயல்படுகின் றன. மாதந்தோறும் 4 லட்சம் விவசாயிகள் சமூக வலைதளங்கள் மூலம் இத்திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.
மேலும், அரசின் வேளாண் காடு வளர்ப்பு சார்ந்த திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.
ஈஷாவின் பல்வேறு சுற்றுசூழல் திட்டங்கள் மூலம் இதுவரை ஓட்டு மொத்தமாக 6.2 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. மேற்கண்டவாறு அவர் கூறினார்.



