fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் நூலகம் அமையும் இடம் ஆதாரமற்ற தகவல்களை கூறுவதா? அதிமுகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

கலைஞர் நூலகம் அமையும் இடம் ஆதாரமற்ற தகவல்களை கூறுவதா? அதிமுகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் குறித்து ஆதாரமற்ற தகவல்க ளை கூற வேண்டாம் என அதிமுகவினரை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, பென்னி குயிக் இல்லத்தை இடித்து விட்டு கலைஞர் நூலகம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு :

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்பு றப்படுத்தி, அந்த இடத்திலேயே கலைஞர் பெயரால் அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கி றது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே இது சட்ட மன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப் பொழுதும் பொதுப் பணித் துறை அமைச்சர் மூலமாக விளக்கம் தெளிவாகத் தெரி விக்கப்பட்டிருக்கிறது.

இப்போதும் சொல்கிறேன்; நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம்.

அதற்கு எந்தவித ஆதாரமும் கிடை யாது. ஒரு தவறான பிரச்சாரத்தினைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அது சட்டமன்றத்திலும் பதிவாகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன். இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச் சராக இருந்திருக்கிறீர்கள்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந் தால் சொல்லுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img