கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்தின் அறிவுறுத்தலின்படி 12.9.2021 அன்று நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில், 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை வலியுறுத்தி, தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படம் தக்கலை பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் வாயிலாக திரையிடப்பட்டது.



