சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி பெரு முகாம் வருகின்ற 12.09.2021, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி பெரு முகாம் நடைபெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அருகில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) நளினி (சேலம்), துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெமினி (ஆத்தூர்) மாநகர் நல அலுவலர் யோகநாதன் ஆகியோர் உள்ளனர்.



