fbpx
Homeபிற செய்திகள்கணபதி பகுதியில் விமான விபத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு திமுக அஞ்சலி

கணபதி பகுதியில் விமான விபத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு திமுக அஞ்சலி

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நடைபெற்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த முப்படைகளின் தலைமை தளபதி திரு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா மற்றும், உடன் உயிரிழந்த சக ராணுவ வீரர்களுக்கு கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி சம்பத்குமார் தலைமையில், வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

இந்த நிகழ்வில் கணபதி பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் கணபதி முருகேசன், பொறுப்புக் குழு உறுப்பினர் பிரகாஷ், சுபாஷ், மாணவரணி தர்மா, இளைஞரணி கணபதி ஜெகதீஷ், இலக்கிய அணி சேரன், மாணவரணி ஸ்டீபன், மற்றும் உறுப்பினர்கள் காமராஜ், சுமோ சேகர், நடுவளவு ராஜா, சதீஷ், சுந்தரேசன், மூலகடை சதீஷ், டைலர் கிங், ஈஸ்வரன், கண்ணையன், அருணாச்சலம், கணபதி கார்த்தி, கிரிராஜன், பால் வின்சென்ட் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img