கட்டுமான துறையில் உள்ள பல்வேறு நிலை சார்ந்த தொழிலதிபர்களை இணைத்து புதிய வாய்ப்புகள் மற்றும் ஒருவருக்கொருவர் கட்டுமான துறை சார்ந்த தொழிலை மேம்படுத்தும் விதமாக, நாட்டிலேயே முதன்முறையாக சி.என்.ஐ.எனப்படும் கட்டுமானம் தொடர்பான பரிந்துரை அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கட்டுமானதுறையில் சாதிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் விதமாக துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் கட்டுமான துறை சார்ந்த பல்வேறு நிலை தொழிலதிபர்கள் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர்
இந்நிலையில் இது தொடர்பான பணிகளை எளிதாக்கும் விதமாக தமிழக அளவில் 18 சாப்டர்கள் துவங்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சி.என்.ஐ. கோவையின் நான்காவது சாப்டராக கோயமுத்தூர் எமரால்டு துவக்க விழா கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
சி.என்.ஐ.யின் நிறுவன தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், கோவை மண்டல வழிகாட்டு நிர்வாகி லிங்கராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் கோயமுத்தூர் எமரால்டு புதிய சாப்டரின் தலைமை செயல் அதிகாரியாக பிரகலாதன்,செயலாளராக ஆனந்த் டேவிட்,துணை செயலாளராக பாத்திமா,பொது தகவல் தலைவராக ஹரீஷ், பொருளாளராக மகேஷ்,உறுப்பினர் மேம்பாட்டு தலைவராக சரவணன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர்.
சி.என்.ஐ.யின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நிறுவன தலைவர் உதயகுமார் வரவேற்பு பேட்ஜ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டுமான துறை சார்ந்த தொழிலதிபர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் துறை சார்ந்த மேம்பாட்டின் பயன் குறித்து கலந்துரையாடினர்.



