தமிழ் மாநில, கிராம அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில், தர்மபுரியில், நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தர்மபுரி, ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில செயலாளர் ராஜி தலைமை வகித்தார்.
இதில், தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு, 40 ஆண்டுகளாக வழங்கப் படாமல் உள்ள பென்சன் தொகையை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில துணைத் தலைவர் துரைசாமி, சேலம் கோட்ட செயலாளர் சின்ன சாமி, நிர்வாகி பெரியசாமி உள்பட, பலர் இதில் கலந்து கொண்டனர்.



