fbpx
Homeபிற செய்திகள்ஒலிம்பிக் வீரர்களுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்தது எக்ஸான்மொபில் நிறுவனம்

ஒலிம்பிக் வீரர்களுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்தது எக்ஸான்மொபில் நிறுவனம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, பஜ்ரங் புனியா ஆகியோரை மொபில் இந்தியா-வுக்கான தனது பிராண்ட் தூதர்களாக புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமி டெட் அறிவித்தது.

புது தில்லியில் இந்நிறுவனத் தின் முன்னணி சில்லறை விற்பனை யாளர்கள் முன்னிலையில் நடந்த விழாவின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

டோக்கியோ 2020-ல் மொத்தம் ஏழு பதக்கங்களைக் கைப்பற்றி வெற்றிகரமான ஒலிம்பிக் போட்டி யாக இந்தியாவுக்கு அமைந்தது. நீரஜ் சோப்ரா முதல் ட்ராக் தடகள வீரராகவும், தனிநபராக தங்கப் பதக்கம் வென்ற இரண்டா வது இந்திய வீரராகவும் ஆனார். மீராபாய் சானு வெள்ளி வென்ற முதல் இந்திய பளுதூக் கும் வீராங்கனையாவார். நிகழ் வில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டிகளில் மூன்று பதக் கங்களை வென்ற ஒரே இந்திய மல்யுத்த வீரராவார்.

எக்ஸான்மொபில் லூப்ரி கண்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி தீபாங்கர் பானர்ஜி பேசுகையில், நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு, பஜ்ரங் புனியா ஆகியோருடன் பிராண்ட் தொடர்பை புதுப்பிப்பதில் பெரு மைப்படுகிறோம்.

அவர்கள் உலகப் புகழை அடைவதற்கு முன்பே அவர்களுடனான எங்கள் தொடர்பு தொடங்கியது. விளை யாட்டு வீரர்கள் இந்தியாவிற்கும் அவர்களின் விளையாட்டிற்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதைப் போல, நாமும் தொடர்ந்து கடினமாக உழைத்து, பிலின் உலகத் தரம் வாய்ந்த பிராண்டுகள், சின்தடிக் தலைமை மற்றும் நம்பகமான, உயர்தர செயல்திறன் மிக்க தயாரிப்புகள் மற்றும் தீர்வு களை நாட்டிற்கு சீராக கொண்டு வருவோம் என்றார்.

பொதுமேலாளர் இம்தியாஸ் அகமது பேசும்போது, மார்க் கெட்டிங் டெப்ளாய்மென்ட், நுகர்வோர் சந்தைப்படுத்தல், எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ், இந்த மூன்று சாம்பியன்களும், இந்தியாவில் நாங்கள் நிமிர்ந்து நிற்பதற்கான ஆதாரமான ஃபராக் லாகர் தெகியே என்பதன் உருவமாக இருக்கிறார்கள்.
இது எங்களின் நிபுணத்துவம், புத்தாக்கம் மற்றும் செயல்திறனுக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு அவர்களின் நாளைய லட்சியங்களைத் திறக்க நம்பிக்கையும் அளிக்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img