fbpx
Homeபிற செய்திகள்ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் கோவையில் மக்கள் குறைதீர் கூட்டம்

ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் கோவையில் மக்கள் குறைதீர் கூட்டம்

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று (அக்.4) நேரடியாக நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு முதல், மக்களிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மனுக்களை வாங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் தான் போட்டு வந்தனர்.

அரசு உத்தரவுக்குப் பின், இன்று முதல் மீண்டும் மக்கள் நேரடியாக ஆட்சியரிடம் மனு அளிக்கும் நடைமுறை துவங்கியது.

இதனால் ஆட்சியர், மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று கொண்டார். இனிவரும் நாட்களில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் குறைதீர் முகாம் நடைபெறும்.

நீண்ட நாட்களுக்குப் பின் நேரடி மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img