fbpx
Homeபிற செய்திகள்எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் சுதந்திர தின விழா

எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் சுதந்திர தின விழா

கோவை சொக்கம் புதூரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ராஜவேலு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தேசியக்கொடியை திருப்பூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர் துவாரகேஷ் அப்பா ராஜ் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பள்ளியில் சிறப்பாக பயின்ற மாணவனுக்கு பரிசளித்து கௌரவிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் துவாரகேஷ் அப்பா ராஜ், தமிழக அரசின் நடை முறைகளை கடைபிடித்து கண்டிப்பாக கொரானா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் எனவும் அனைவரும் முக கவசம் அணிவது முக்கியம் எனவும் மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி உயர் பதவிகளை அடைந்து நமது நாட்டின் பெருமையை உலகறிய எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

படிக்க வேண்டும்

spot_img