கோவை தியாகராய புது வீதி பகுதியில் பாஸ்மதி டிரேடர்ஸ் என்ற பெயரில் மொத்த அரிசி வியாபாரம் நடத்தி வருபவர் கிருஷ்ணகுமார் என்பவரின் மனைவி கீதா (51) .
இவரது நிறுவனத்தில் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த பாபு என்கிற பாபு மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்கிற ஜில் ரவி ஆகியோர் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்களது நடவடிக்கை சரியில்லாமல் இருந்து வந்த தால் அவர்களை கீதா பணியிலிருந்து நிறுத்தினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் களது அரிசி குடோன் கணக்கு வழக்குகளை கீதா சரி பார்த்தார்.
அப்போது 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூடைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு இதுகுறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வேலையிலிருந்து நிறுத்தப்பட்ட ஊழியர்கள் இருவரும் வேன் மூலம் அரிசி குடோனுக்கு வந்து மாற்று சாவியை போட்டு திறந்து அரிசி மூடைகளை திருடி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து கீதா ஆர்எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தபாபு, ஜில் ரவி மற்றும் வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.



