fbpx
Homeபிற செய்திகள்ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று(செப்.4) காலை ஒருவர் கையில் பையுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்ய முயன்றனர்.

ஆனால், அதற்குள் பையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கமுயன்றார். இதனையடுத்து அவரை தடுத்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். விசாரணைக்கு அவரை காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில், அவர் திருநெல்வேலியை சேர்ந்த குமாரசாமி என்பதும், பெரியநாயக்கன்பாளையம் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

அந்த ஓட்டலில் சம்பளம் தராததால் விரக்தியடைந்த குமாரசாமி, தீக்குளிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

சமீப நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமிற்கு வருபவர்களில் சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சில நொடி சிதறல்களும் அவர்களின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்பதை உணர மறுக்கின்றனர். எந்தப் பிரச்சினைக்கும் மரணம் தீர்வாகாது.

இது போன்று பிடிபடும் நபர்களுக்கு போலீசார் தகுந்த மன நல சிகிச்சை அளித்து தன்னம்பிக்கையூட்டி அனுப்பி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img