கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையைச் சுற்றி நடந்து வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக்.
கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலை அமைந் துள்ளது. இந்தசிலை அமைந்துள்ள இடத்தை சுற்றிலும், பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை இன்று(செப்.4) மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பா ளரும், முன் னாள் எம்.எல். ஏ.மான நா.கார்த்திக் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
சிலையைச் சுற்றிலும் உள்ள புற்களை முறையாக பராமரிக்க வேண்டும், வெயில் காலங்களில் தண்ணீரை இரண்டு, மூன்று முறைவிட்டு புற்கள் வாடி விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று பராமரிப்பாளர்களிடம் தெரிவித்தார்.
அவருடன் காந்திபுரம் பகுதிக்கழக திமுக பொறுப்பாளர் ஆர்.எம். சேதுராமன், 51-வது வட்டக் கழகப் பொறுப்பாளர் எஸ்.போஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



