fbpx
Homeபிற செய்திகள்அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவி எழுதிய புத்தகம் பேராசிரியர் சூரியநாராயணன் வெளியிட்டார்

அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவி எழுதிய புத்தகம் பேராசிரியர் சூரியநாராயணன் வெளியிட்டார்

கோவை சௌரிபாளை யம் அன்னை வேளாங் கண்ணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளியின் முன்னாள் மாணவி செல்வி வி.வினி ஜோனா எழுதிய Never Thought Ever Expected 2019 to …? புத்தகம் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை பேரா சிரியர் டாக்டர் சூரிய நாராயணன் வெளியிட, டாக்டர் சத்தியகண்ணதா சன், டாக்டர் திவாகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் பள்ளி தாளா ளர் விக்டர் சகாயராஜ், முதல்வர் மெர்சி விக்டர், செயலாளர் விவின் ஆண்ட்ரூஸ் மற்றும் தொழிலதிபர் அமல்ராஜ், அரிமா சங்க ஆளுநர் சண்முகசுந்தரம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பேராசிரியர் முனைவர் சூரிய நாராயணன் பேசுகையில், புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தி லும் காணப்படும் மனித நேயம் குறித்த சிறப்பம் சங்களையும் வார்த்தை பயன்பாடுகளையும் விளக்கி மதிப்புரை வழங்கினார்.

டாக்டர் சத்தியகண்ணதாசன், வின்சென்ட் பால் ரொசாரியோ ஆகியோர் இளம் எழுத்தாளர் வினி ஜோனாவை வாழ்த்திப் பேசினார். லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவிலிருந்து பன்னாட்டு தேர்வு மதிப் பீட்டாளர் சேவியர் அற்பு தம் பெரியசாமி அவர்கள் புத்தக மதிப்புரை வழங்கினார்.

இறுதியில் நூலாசிரியர் வி.வினி ஜோனா இந்நூலை எழுதுவதற்கு உந்துதலாக அமைந்த நிகழ்வுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.

அவர் கையெழுத்திட்ட பிரதியை வாங்க முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு புத்தகங்களை வழங்கி, அனைவருக்கும் நன்றி கூறினார்.

புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாலகிருஷ்ணன், தினேஷ், செல்வகுமார், ஜான் ஸ்டீபன், ஜெர்ரி, ஆனந்த் மற்றும் அஷ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img