fbpx
Homeபிற செய்திகள்அதிமுக நிர்வாகிகள் தேர்வு: விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

அதிமுக நிர்வாகிகள் தேர்வு: விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் கழக அமைப்பு தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சேலம் மேற்கு ஒன்றியம் சேலத்தாம்பட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.

சேலம் புறநகர் கழக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜீ தலைமையில்நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக தேர்தல் ஆணையாளர்கள் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், திருப்பூர் பகுதி கழக செயலாளர் அன்பரசு, கன்னங்குறிச்சி வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலையில் 7 பஞ்சாயத்துக்கு உட்பட்ட 78 கிளை தேர்தலுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட ஒன்றிய பொருளாளர் மெய்யப்பன், தமிழ்ச் செல்வன், மாதையன், எம்ஜிஆர் மன்ற ராஜ மாணிக்கம், இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img