Homeபிற செய்திகள்ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: 54 பேருக்கு பணி ஆணைகள் வழங்கல்

ஹேண்ட் இன் ஹேண்ட் சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி: 54 பேருக்கு பணி ஆணைகள் வழங்கல்

மதுரையில், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பாக நடந்த வேலைவாய்ப்பு பயிற்சியில் பங்கேற்ற 54 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாகத் தலைவர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோசனைப்படி, முத்தூட் நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், இளைஞர்களுக்கு வேலைவாய் ப்பை உறுதிப் படுத்தும் வகையில் வழிகாட்டும் இலவச சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு மதுரை, சென்னை, கோவை, திருப்பதி, புத்தூர், பெங்களூர், விஜயவாடா, பூனா உள்ளிட்ட பல பகுதிகளில் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு, வாடிக்கை யாளர் வர்த்தக உறவை மேம்படுத்துவது எப்படி?, டிஜிட்டல் மார்க்கெட்டிங், டெலி மார்க்கெட்டிங் விற் பனை திறன் வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புக்கான அனைத்து வழிமுறைகளும் சிறப்பு பயிற்சியாக ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

ஆன்லைன் வழியாக 25 நாட்களும், நேரடியாக 10 தினங்களும் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. மதுரையில் சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, அரசு கலை கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்குப் பின் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

பயிற்சி பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு நாடு முழுவதும் உள்ள பிரபல தொழில் நிறுவனங்களில், வேலைவாய்ப்பு அமைத்துத் தருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இதற்கான ஏற்பாடுகளை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் திறன் பயிற்சி மேலாளர்கள் செய்திருந்தனர்.

பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, பணியில் சேர்வதற்கான பணி அணை வழங்கப்பட்டது. மொத்தம் 54 பேருக்கு இந்த பணி அணைகள் வழங்கப்பட்டன.

ஜே.எல்.வி.எம். என்ற நிறுவனத்தில் 18 பேரும், ஷிவ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் 18 பேரும், லித்தி இன்ஃபோ டெக் என்ற நிறுவன த்தில் 18 பேரும் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்

ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா துணை பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், முதன்மை மேலாளர் அருள்குமார், மதுரை பயிற்சி மேலாளர் அன்பு விஜய், எஸ்.ஆர்.எம். நிர்வாகி அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img