fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை, மனநல சிகிச்சை மையம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மூளை, மனநல சிகிச்சை மையம் துவக்கம்

கோவையில் முதல் முறையாக ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையின் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, சென்னையில் உள்ள புத்தி கிளீனிக்குடன் (Buddhi Clinic) இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தை கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

மையத்தை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, புத்தி கிளீனிக் நிறுவனர் டாக்டர் இ.எஸ். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தனர்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித், தலைமைச் செயல் அலுவலர் சி.வி. ராம் குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஒருங்கிணைந்த மூளை மற்றும் மனநல சிகிச்¬ சயானது, நோயாளிகளுக்கு நாள்பட்ட கோளாறுகள் மீது தனிகவனம் செலுத்தி, புத்துணர்ச்சியை மீட்டெடுத்து மறுவாழ்வு பெறச் செய்து, அவர்களின் உடல்நலனை மேம்படுத்துவதாகும்.

இம்மையத்தின் சிகிச்சையானது ஆற்றல் மிக்க ஆயுர்வேத முறையுடன் நவீன மறுவாழ்வு அறிவியலை உள்ளடக்கிய பாரம்பரிய சிகிச்சை முறையைக் கொண்டது.

14 வகையான மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கியது.
360 டிகிரியில் நோயாளி களின் உடல், மனம் மற்றும் மனநலனை பழங்கால முறையில் மதிப்பீடு செய்து, நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து பயன டையச் செய்கிறது.

தனித்துவமிக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூளை மற்றும் மனநல சிகிச்சை மையத்தில்,‘Cookie-cutter’அணுகு முறையின் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த மையத்தில் அளிக்கப்படும்,Transcranial Magnetic Stimulation (TMS)சிகிச்சையானது நரம்பியல் மற்றும் மனநல கோளாறுகளில் இருந்து நோயாளிகளை விடுவித்து, அவர்களை நல்ல நிலையை அடையச் செய்யும்.

Transcranial Direct Current Stimulation (TDCS)சிகிச்சையானது, நோயாளிகளின் தலையில் தாழ்வழுத்த மின்னாற்றலைப் பாய்ச்சி மூளையை சரியான பாதையில் இயங்கச் செய்வதாகும்.

Transcutaneous auricular Vagus nerve Stimulation (TAVNS) சிகிச்சையானது மனித நரம்பு மண்டலக் கிளைகளைச் சீரமைப்பதாகும்.

படிக்க வேண்டும்

spot_img