கோவை நவஇந்தியா வில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலானதொழில் நுட்ப திருவிழா நேற்று (ஏப்.8) நடை பெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறி வியல் துறை சார்பில் மாநில அளவிலான தொழில்நுட்ப திருவிழா (Ordusion ’22) கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.
இதன் தொடக்கவிழா விற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். கணினி அறிவியல்துறை மூன்றாமாண்டு மாணவர் ஹரிஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராகக் கோவை வருமான வரித்துறை இணை ஆணையர் வி.ஸ்ரீவிஜய் குத்துவிளக்கேற்றி தொடங் கிவைத்து பேசிய தாவது :
கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நடத்தும் தொழில்நுட்ப திருவிழா என்னும் இந்நிகழ்வு தற்போதைய சூழலில் மிகவும் முக்கியமானது.
பிளாக் செயின், கிரிப்டோ கரன்சி போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வினாடி வினா, மார்கெட்டிங், போஸ்டர் டிசைன், டிரஷர் ஹன்ட், ஆய்வுக்கட்டுரை வழங்கு தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்துவது பாராட்டுக்குரியது.
இத்தருணத்திலே ஆனந்த் மஹிந்திராவின் வரிகளை குறிப்பிட விரும்புகிறேன். தலை மைப்பொறுப்பில் உள்ள வர்கள் பின் னோக்கிப் பார்ப்பதில்லை. தங்க ளின் இருபுறமும் பார்ப்ப தில்லை. அவர்கள் முன்னோக்கி மட்டுமே பார்க்கிறார்கள்.
ஆதலால் நம்முடைய பார்வை முன் னோக்கியதாக இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்வில் உயர்ந்த பதவிகளை எளிதில் பெற முடியும். இதுபோன்ற நிகழ் வுகள் மாணவர்களின் தனித்திறன்களை மறைந் திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்வாய்ப் பாக அமையும் என நம்புகி றேன் என்றார்.
கணினி அறி வியல் துறையின் முதுநிலை மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்தியா வின் பல்வேறு நிறு வனங் களில் பணிவாய்ப்பு பெற்றுள்ள கணினி அறிவியல் துறையில் பயிலும் மூன்றாமாண்டு மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் மரிய பிரிசில்லா, நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மகேந்திரன், பேரா.நாகராஜன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர். இந்நிகழ்வினை கணினி அறிவியல் துறை ஏற்பாடு செய்திருந்தது.



