fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு ‘இளம் தொழில் முனைவோர்விருது’

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு ‘இளம் தொழில் முனைவோர்விருது’

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணாகலை மற்றும் அறிவியல்கல்லூரியின்முன்னாள்மாணவர்சங்கம், புதுமைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்திய, ‘முன்னாள் மாணவர் நேருக்கு நேர்சந்திப்பு’ மற்றும் ‘இளம்தொழில் முனைவோர் விருது வழங்குதல் ’நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.  


ஸ்ரீராமகிருஷ்ணாகலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆஸ்திரேலியா ஜெ.எம்.எம். கன்சல்டன்ட் நிறுவனர் மற்றும் முன்னாள் மாணவர் எம்.முரளிமனோகர் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டு, ‘புதிய தொழில்வாய்ப்புகள்’ குறித்துபேசியதாவது: 
மாணவர்களின் வாழ்வில் தொழில் வாய்ப்புகள் மிகவும் அவசியம். அதற்கு கல்லூரியில் இருந்தே தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்.வேலைவாய்ப்புகளுக்கு ஆங்கில அறிவே அடிப்படை. பெருநிறுவனங்கள் பட்டதாரிகளிடம் இத்தகுதியை எதிர்பார்க்கின்றன. 


வேலைவாய்ப்பு எங்கு வேண்டுமானாலும் அமையலாம். அவற்றில்உங்களைநிறுத்திக்கொள்ளஅடிப்படை மொழியறிவு அவசியம். ஆங்கிலத்தில்எழுத, படிக்க, உரையாட பழகிக்கொள்ளவேண்டும்.அதேநேரத்தில். தாய்மொழியறிவிலும் சிறந்து விளங்க வேண்டும். உங்களுடையசிந்தனை, செயல் அனைத்து தாய்மொழி வழியாக இருப்பதே சிறந்தது. நம்முடைய மூளை அப்படி தான் சிந்திக்கிறது. 


இவையனைத்திற்குமானகளம் கல்லூரி தான். வேலைவாய்ப்பு கலைகல்லூரி வளாக நேர்காணல்கள் மூலமாகவே பெற்றுவிடுவது நல்லது. படித்துமுடித்துவிட்டுச்சென்றால்அதிகஎண்ணிக்கையிலான போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டிவரும். வேலைவாய்ப்பு 50 சதவீதம்திறமை, 50 சதவீதம் தகவல் தொடர்பின் அடிப்படையிலேயே அமையும். உங்களுக்குள் ஒருநெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ளவேண்டும். சிறந்த பரிந்துரைகளின் பேரிலேயே வேலைகிடைக்கும். அத்தகைய நற்பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு எம்.முரளிமனோகர் பதிலளித்தார். அதைத்தொடர்ந்து பி.பி.ஏ. சி.ஏ. இரண்டாமாண்டு மாணவி ஏ.ரூத்இவாஞ்சலினுக்கு, ‘இளம் தொழில் முனைவோர் விருது’ வழங்கப்பட்டது. இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டமாணவர்களுக்குசான்றிதழ்கள் வழங்கப்பட்டன.முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் முனைவர் ஆர்.பிரபு, பொருளாளர் ஆர்.ஷோபனா மற்றும் மாணவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் புதுமைகள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் தே.சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img