கோவை மத்திய சிறை புறநகர் பகுதிக்கு இட மாற்றம் செய்யப்படும் என்றும் காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டா லின் புதிய திட்டங்கள், முடிவுற்ற பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக இன்று மதியம் கோவை வந்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், கலெக்டர், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் அவி னாசி சாலையில் உள்ள வ.உ.சி மைதானத்துக்கு சென்றார். விமான நிலை யத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை அவர் காரில் வரும் வழிகளில் கட்சி நிர்வாகிகள் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்து கரகாட்டம், மேள தாளங்கள் முழங்க அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் நடைபெறும் வ.உ.சி. மைதானத்திற்கு சென்றார். அங்கு அவர், பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.587.91 கோடி மதிப்பில் நிறை வேற்றப்பட்டுள்ள 70பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கோவை மாவட்டத்தில் ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அந்த பணிகளையும் தொடங்கி வைத்தார். மேலும் பல அரசு துறைகளின் சார்பில் ரூ.646.61 கோடியில் 25,123 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி உரையாற்றினார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தமாக ரூ.1324.25 கோடியில் புதிய நலத்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் இன்று தொடங்கி வைத்தார்.
மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இந்த விழாவை நிகழ்ச்சி யாக அல்லாமல் மாநாடு போல் நடத்துகிறார் செந்தில்பாலாஜி.
மக்கள் பயன்பெறும் வகையில் இதனை ஏற்பாடு செய்த செந்தில்பாலாஜியையும், மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அலுவலர்களையும் வாழ்த்துகிறேன். சட்ட மன்ற தேர்தலில் கோவையில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறமுடியவில்லை.
வெற்றியை தவற விட்டாலும் கோவையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.
சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எனது சான்றிதழை வாங்கி விட்டு கலைஞரின் நினைவி டத்திற்கு சென்றேன். அப்போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து என்னிடம் கேள்வி எழுப்பினர். அப்போது வெற்றி தந்த மக்களுக்கு நன்றி கூறினேன்.
அதோடு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாது ஓட்டு போடாதவர்களுக்கும் பணியாற்றுவேன் என்று கூறினேன். அதனை தொடர்ந்து கடைபிடிப்பேன். அதன்படிதான் கோவைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்துள்ளேன். எந்தெந்த மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதி இல்லையோ அங்கெல்லாம் அமைச்சர்களை நியமித்துள்ளேன்.
கோவையில் லட்சக்க ணக்கான மக்களை சந்தித்து கோரிக்கை பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம். மனு அளித்தால் திமுக நடவடிக்கை எடுக்கும். சில பணிகள் கால \தாமதமாக கூட முடியும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்க முழு தகுதி எனக்கு உள்ளது. தேர்தலுக்கு முன் அனைத்து தொகுதியிலும் சென்று மனு பெற்றேன்.
ஆட்சிக்கு வந்தபின் மனு பெட்டியை தான் திறப்பேன் என்றேன்.ஆனால் என்னால் பெட் டியை திறக்க முடியாது என்றனர். சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல் வோம் என்பதை தாரகமாக கொண்டு செயல்பட்டு அனைத்து பெட்டிகளையும் திறந்து லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்தோம்.
ஸ்டாலின் 100 நாட்களில் எனக்கு தீர்வு கொடுத்தார் என்று மக்கள் கூறுகின்றனர். மனு மேல் நடவடிக்கைகள் எடுக்காத மனுக்களுக்கு விளக்கம் கொடுத்தோம்.
இப்போதும் மனுக்களை வாங்கிவிட்டு தான் வந்தேன்.
இது அனைத்தும் நிறைவேற்றப்படும். பல கோடி மதிப்பு திட்டங்களை செய்தாலும், தனி மனித கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது முக்கியம். இந்த அரசு அத்தகைய அரசாக இருக்கும். கோவைக்கு ஏராள திட்டங்களை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.
10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாகத்திற்கு ரூ. 1132 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டது. விரைவில் நிலத்தை கைய கப்படுத்த பணிகள் துவங்கும்.
கோவை மாநகராட்சியில் 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடி நீர் வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். கோவையில் திமுக ஆட்சியில் திட்ட சாலைகள் அமைக்கப்பட்டன.
கடந்த ஆட்சியில் எந்த பணியும் இல்லை. அதன்படி 5 திட்ட சாலைகள் மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் துவங்கும். மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட வெள்ள கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டியில் பாதள சாக்கடை திட்டங்கள் ரூ. 309 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை நகரின் மையத்தில் உள்ள சிறைச்சாலை நகரின் வெளியே கொண்டு செல்லப் படும். காந்திபுரத்தில் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் ரூ.200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்த ரூ.11 கோடி செலவில் கூடுதல் பணிகள் தொடங்கும்.மக்களுக்கு மருத்துவ வசதி அளிக்க 16 கோடியில் 63 நல்வாழ்வு மையங் களும், 3 மருத்துவ ஆய்வு கூடம் கட்டப்பட உள்ளது.
சாலை விளக்கு இல்லாத இடத்தில் ரூ20 கோடியில் விளக் குகள் அமைக்கப்படும். இதற்கு விரைவில் அர்சாணை ஒதுக்கி நிதி ஒதுக்கி மக்களிடம் ஒப்ப டைக்க உள்ளோம். சென்னை போல் கோவை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
கோவை நகர்ப்புற வளர்ச்சிக்குழுமம் ஏற்படுத்தப்படும் என்று ஏற் கனவே தெரிவித்திருந்தோம். அதன்படி அர சாணை வெளியிடப்பட்டது.
திட்டங்களை செயல்படுத்த அமைச்சர் செந்தில்பாலாஜியை நியமித்தோம். உழைக்க கூடிய வரை தேர்வு செய்து உங்களுக்கு ஒப்படைத்தோம்.
கோவையை அனைத்து உட்கட்டமைப்பையும் கொண்ட மாவட்டமாக உரு வாக்குவோம். தமிழகத்திற்கு ஏற்றுமதி கொடுக்கும் மாவட் டம் கோவை, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து, லட்சக்கணக்கான தொழிலாளிகள் வாழ்வளிக்கும் மாவட்டம் இது தான்.
இது போல் தொழில் வளர்ச்சி அனைத்து மாவட்டத்திற்கும் வேண்டும் என்பது என் ஆசை. இந்தியாவில் தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும்.
இந்தியாவின் தொழில் முகவரியாக தமிழகம் மாற வேண்டும். கோவையில் நாளை தொழில் முனைவோர் மாநாடு நடக்க உள்ளது.இதில்பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை உருவாகும்.
இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். அதில் முதலிடம் கோவைக்கு தான். செயல்தான் எனது பணி. கோவை மாவட்டம் தமிழகத்தில் அனைத்து துறையிலும் தலை சிறந்த மாவட்டமாக இரு க்கிறது. மாவட்டத்தை இன்னும் மேம்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி, வனத் துறை அமைச்சர் இராம ச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ், கழக துணைப்பொதுச் செயலாளர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்பி, அந்தியூர் செல்வராஜ் எம்பி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், பிஆர்.நடராஜன், மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கவுண்டர், சேனாபதி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங் கேற்றனர்.
விழாவில் பங்கேற்பதற்காக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க.வினர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவை வ.உ.சி மைதானத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் மைதானத்தில் போடப்பட்டுள்ள பந்தலில் அமர்ந்திருந்தனர்.
மைதானத்தில் பொது மக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
முதல்- அமைச்சர் வருகையை யொட்டி கோவையில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொ ண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மேடை அருகே துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப் பில் ஈடுபட்டிருந்தனர்.
மாநகரில் உள்ள காந்திபுரம் பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், முக்கிய கடைவீதிகள், விமான நிலையம் முதல் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் வரை உள்ள அவினாசி சாலையின் இருபுறமும் போலீசார் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதன்பிறகு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங் களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.



