fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச மாடலிங் போட்டிக்கு கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன் ராணா தேர்வு

சர்வதேச மாடலிங் போட்டிக்கு கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன் ராணா தேர்வு

துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்கு கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன் தேர்வாகியுள்ளார்.

துபாயில் நாளை (23-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை சர்வதேச சிறுவர்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இதில் 15 நாடுகளை சேர்ந்த ஏராளமான மாடல்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த போட்டியில் கலந்துகொள்ள கோவை ராம்நகரை சேர்ந்த சிவகுமார் – கோமதி தம்பதியினரின் 6 வயது மகன் ராணா தேர்வாகியுள்ளார். 1-ம் வகுப்பு படித்து வரும் ராணாவின் தந்தை ஜவுளிக்கடையும், தாய் அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர்.

கோவையில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் முதன்முறையாக பங்குபெற்ற ராணா முதல் பரிசை தட்டி சென்றார். அப்போது ராணாவுக்கு வயது 3.

இதனை தொடர்ந்து பெங்களூரு, சென்னை, சேலம் மற்றும் கோவா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறுவர்களுக்கான பேஷன் ஷோவில் கலந்து கொண்ட ராணா, இதுவரை 13-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி விளம்பரங்கள், குறும்படங்களில் ராணா நடித்துள்ளதாக அவரது தாய் கோமதி தெரிவித்துள்ளார்.

தனக்கு மாடலிங் மிகவும் பிடிக்கும் என கூறும் ராணா எதிர்காலத்தில் கடற்படை அதிகாரியாக வேண்டுமென்பதே தனது ஆசை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img