fbpx
Homeபிற செய்திகள்வேளாண் மதிப்பு கூட்டுப் பொருள்களுக்கு தரச்சான்று பெறும் வழிமுறைகள் பயிற்சி

வேளாண் மதிப்பு கூட்டுப் பொருள்களுக்கு தரச்சான்று பெறும் வழிமுறைகள் பயிற்சி

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 12 மாவட்டங்களை சேர்ந்த வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு, சங்கங்களால் தயாரிக்கப்படும் வேளாண் மதிப்பு கூட்டுப் பொருட்களுக்கு இந்திய தரச் சான்று பெறும் வழி முறைகள் மற்றும் தர நிர்ணயம் குறித்த ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி கோவையில் உள்ள ஜென்னீஸ் ரெசிடன்சியில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ். பார்த்திபன், தலைமை வகித்து பயிற்சியினை துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர் களாக கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் இரா.இந்துமதி, திருப்பூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதி வாளர் சொ.சீனிவாசன் கலந்து கொண்டனர்.

ஏ.விஜயசக்தி, இணைப் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூடடுறவு விற்பனைச் சங்கம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் கோவை சரகம், விஜய கணேஷ் கலந்து கொண்டனர்.

இந்திய தரச் சான்று ஆணையத்தின் முதுநிலை இயக்குநர் வி.கோபிநாத், பயிற்சி வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img