fbpx
Homeபிற செய்திகள்வேளாண் பல்கலை. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விவசாயி சிலை திறப்பு

வேளாண் பல்கலை. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விவசாயி சிலை திறப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொடங்கிய பின்பு 1972-ம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு, பல்கலைக்கழக பொன்விழா ஆண்டின் ஒருபகுதியாக நடைபெற்றது.

இப்பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர்நீ.குமார், இந்த ஆண்டுப டித்த மாணவர்களில் ஒருவர் ஆவார்.

இவரது தலைமையில்ஆகஸ்ட் 28, 29-ம் நாள் இப்பல்கலைக் கழக வளாகத்தில் 1972-76,77 -ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் தங்களுடைய பழைய நினைவுகளை, குடும்பத்தார், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

அப்போதைய வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ,கோயம்புத்தூர், 1971-ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகமாக மாறியது. 1972-ம் ஆண்டு வேளாண்மை, தோட்டக்கலை மட்டுமல்லாமல் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மூன்று மாதங்களைக் கொண்ட மூன்றுமாத கல்வி முறை என்ற புதிய அமைப்பின் கீழ் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பும் அறிமுகப்படு த்தப்பட்டது.

இதில் இளங்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை 4 ஆண்டுகளும், இளங்கலை வேளாண்மை பொறியியல் 5 ஆண்டுகளும் கொண்ட பட்டப்படிப்புகள் ஆகும்.

2021-ம் ஆண்டில், பல்கலைக் கழகத்தின் பொன்விழாவைக் கொண்டாட அந்த வருட மாணவர்கள் அனைவருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு.

1972-76,77 அணி மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து “அந்த நாட்களில் அவர்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் விடுதியில் தங்கியிருந்த வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கு” ஒருகுறிக்கோளை அமைத்துக் கொண்டோம் என்றுகூறினார்கள்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தாவரவியல் பூங்காவில் விவசாயியின் சிலை உருவத்தை நிறுவினர்.

4 அடி உயர மேடையில் பொருத்தப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட கலப்பை கொண்ட விவசாயியின் ஐந்தரை அடி உயர அளவு சிலையானது, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட கிராணைட் அடுக்குகளால் சூழப்பட்ட மேடையும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இச்சிலை ஆகஸ்ட் 29 -ம் தேதி துணைவேந்தர் முனைவர் நீ.குமார் தலைமையில், தாவரவியல் பூங்காவிற்குள் திறந்து வைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img