fbpx
Homeபிற செய்திகள்வெங்கிட்டாபுரம் முதல் கேஎன்ஜி புதூர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீராக்க கோரிக்கை...

வெங்கிட்டாபுரம் முதல் கேஎன்ஜி புதூர் வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை உடனடியாக சீராக்க கோரிக்கை மனு

கோவை அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் அதன் நிறுவனத் தலைவரும் வழக்கறிஞருமான வி.புஷ்பானந்தம், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் தெரிவித்து இருப்பதாவது:

தற்போது மேட்டுப் பாளையம் ரோட்டில் பாலங்கள் அமைக்கப்பட்டு வருவதால் கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் குறிப்பாக மேட்டுப்பாளையம். குன்னூர், ஊட்டி கோத்தகிரி, மசினகுடி மற்றும் சிறுமுகை மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பஸ் கள் அனைத்தும் தடாகம் ரோடு வழியாகத் தான் செல்கின்றன.

வெங்கிட்டாபுரத்தில் இருந்து கேஎன்ஜி புதூர் (காசி நஞ்சேகவுண்டன் புதூர்) வரை ரோடுகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

தற்போது பெய்த கனமழையால் ரோட்டில் உள்ள கற்கள் பெயர்ந்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களை பஞ்சராக்குகிறது.

குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் தினமும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகவே, தடாகம் ரோடு வெங்கிட்டாபுரம் முதல் கேஎன்ஜி புதூர் வரை குண்டும் குழியுமாக உள்ள பழுதடைந்த சாலையை உடனடியாக சரி செய்து தரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img