விவசாயிகளுக்கு மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் அதிக லாபம் பெற்றுத் தருகிறது என பாஜக மாநில தலைவர் தருமபுரியில் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று தரும புரியில் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
தருமபுரி மாவட்டம் பாப்பாரப் பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் அண்மையில் தமிழக அரசால் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பெயரில் உள்ள நினைவாலயம் என்ற சொல்லால் பொருளே மாறுகிறது. எனவே, பாரதமாதா ஆலயம் அல்லது திருக்கோயில் என்று பெயர் மாற்றும் படி பாஜக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால்,‘முந்தைய அதிமுக அரசு அரசாணை வெளியிட்ட போதும், நிதி ஒதுக்கிய போதும் நினைவாலயம் என்ற சொல்லை எதிர்க்காத பாஜக தற்போது மட்டும் ஏன் எதிர்க்கிறது’ என்று தற்போதைய செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிந £தன் கேட்டுள்ளார்.
ஒரு வரலாற்று பிழை குறித்து கவனத்துக்கு கொண்டு வரும்போது, பெயர் மாற்ற கோரிக்கையில் உள்ள நியா யங்களை புரிந்து கொண்டு ந டவடிக்கை எடுப்பதற்கு மாறாக முந்தைய அரசை குறை கூறி அபத்தமாக பேசுகிறார் அமைச்சர்.
இன்னும் 1 மாதத்தில் பாரதமாதா நினைவாலயம் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை எனில் பாஜக சார்பில் மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும். பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
ஆனால், தமிழகத்தில் பெரியாருக்கு முன் பாகவே சமூகநீதிக்காக பாடுபட்ட பா ரதியார், வஉசி உள்ளிட்ட தலை வர்களின் பணிகளை இ¬ ளய தலைமுறையினர் அறியும் வகையில் அரசு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும்.
காவிரியாற்றின் குறுக்கே மேகே தாட்டு பகுதியில் கர்நாடகா புதிய அணைகட்டும் நடவடிக்கையை தமிழக பாஜக ஏற்கெனவே எதிர்த்துள்ளது. இப்போதும் அதே நிலை ப்பாடு தொடர்கிறது. மண்டி, இடைத்தரகர்கள் போன்றோரின் தலையீடு இல்லாமல் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்று லாபம் ஈட்ட வாய்ப்பையும், வழியையும் ஏற்படுத்தித் தருகிறது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள்.
இந்த சட்டத்தை தமிழகத்தின் உண்மையான விவ சாயிகள் யாரும் எதிர்க்கவில்லை. கம்யூனிஸ்ட் விவசாயிகள் சிலர் தான் கட்சிக் கொடிகளுடன் ரயிலேறி டெல்லி சென்று, அங்கு போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசியல் கண்துடைப்புக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார். இதனால் தமிழக விவசாயிகளின் எதிர்காலம் பாதிக்கும். அதை ஒருபோதும் தமிழக பாஜக அனுமதிக்காது.
சட்டங்களின் உண்மைநிலை குறித்து விவசாயிகளிடம் பாஜக விளக் கிச்சொல்லும். இவ்வாறு கூறினார்.
மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.பாஸ்கர், வழக் கறிஞர் பிரிவு ரமேஷ்வர்மா, ஏ.கே.நாகராஜ் மற்றும் பலர் பேசினர்.சரவணன் நன்றி தெரிவித்தார்.



