fbpx
Homeபிற செய்திகள்விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

விமான நிலையத்தில் தொழிலதிபரிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

விமான நிலையத்துக்கு வந்த தொழிலதிபரிடம் இருந்து கைத்துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் 92 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரை சேர்ந்த சசிகுமார் என்பவர் சென்னைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தார்.

அவரது உடைமைகளை அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர்.

அதில் உடைமைகள் இருந்த பையில் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய 92 குண்டுகள் இருப்பதும், அவை பயன்படுத்தும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகளை பீளமேடு போலீ சாரிடம் ஒப்படைத்த, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புகார் அளித்தனர்.

விசாரணையில் சசிக்குமார் திருப்பூரில் தொழிலதிபராக உள்ளதும், துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வைத்துள்ளதாகவும், தவறுதலாக அவரது கைப்பையில் துப்பாக்கி குண்டுகள் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இருப்பினும் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img