தொழிற்சாலைகளில் விபத்து களை குறைக்க நிர்வாகத்துக்கு சிறந்த வழிமுறைகளை எடுத்துக் கூறும் தொழிலாளர்களுக்கு மாநில அரசின் உயர்ந்த விருதான தொழிலாளர் விருது வழங்கப்படும் என்று கோவையில் அமைச்சர் சி.வெ.கணே சன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் அரசூரில் உள்ள கேபிஆர் தொழிற்சாலையில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற துரித பொருளாதர வளர்ச்சியுடன், தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தொழிலாளர் பணிபுரியும் இடங்களில் காணப்படும் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாதுகாப்பான மற்றும் இணக்கமான பணிச் சூழ்நிலைகளை உருவாக்குவதில் தொழிலாளர் நலத்துறை முக்கிய பங்காற்றுகிறது.
தொழிற்சாலைகள் நிறைந்த கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தொழிலா ளர்களின் பணி பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு, சமூக பாது காப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கும், தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளை பாதுகாப்பதற்கும் விரிவான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சூலூர் வட்டம் அரசூரில் உள்ள கே.பி.ஆர். மில் லிட்., மற்றும் குவாண்டம் நீட்ஸ் தொழிற்சாலைகளில் இன்று (நேற்று) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தொற்று காலத்தில் முறையாக ஊதியம் வழங்கப்பட்ட விவரம் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறியப்பட்டது. தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தொழிலாளர்களின் பணிக்கு பாதுகாப்பு வழங்கவும், அவர்களின் நலன்களைக் காக்கவும் தொழில் நிறுவனங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
தொழிற்சங்கங்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் நடைபெறும் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்த தொழிற்சாலைகளுக்கு மாநில அரசின் பாதுகாப்பு விருதுகள், விபத்துகளைக் குறைக்க சிறந்த வழிமுறைகளை எடுத்துக் கூறும் தொழிலாளர்களுக்கு மாநில அரசின் சிறந்த உயர்ந்த தொழிலாளர் விருதும் வழங்கப்படும்.
இவ்வாறு தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளின் பாதுகாப்பு, தொழிலாளர்களின் நலன்கள் மற்றும்
சுகாதாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இந்த ஆய்வு நடந்தது.
ஆய்வின்போது, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெகதீசன், கூடுதல் ஆணையர் ஆனந்த் தொழிலாளர் கூடுதல் இயக்குநர் பொன்னுசாமி, இணை இயக்குநர்கள் வேணுகோபால், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.