fbpx
Homeபிற செய்திகள்விடுதலைக்குத் தகுதியான ஆயுள் தண்டனை கைதிகள் பட்டியல் தயாராகி வருகிறது கோவையில் அமைச்சர் ரகுபதி பேட்டி

விடுதலைக்குத் தகுதியான ஆயுள் தண்டனை கைதிகள் பட்டியல் தயாராகி வருகிறது கோவையில் அமைச்சர் ரகுபதி பேட்டி

கோவை மத்திய சிறையில் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறி யதாவது:

சிறைவாசிகள் 10, 12ம் வகுப்பு தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். சிறையில் உள்ள கைதிக ளுக்கு முழுமையான மருத்துவ வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகளின் பாதுகாப்பில் அக்கறை உள்ள அரசாக இந்த அரசு உள்ளது.

10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுவிப்ப தாக அறிவித்துள்ளார் முதல்வர். ஆனால் வெடிகுண்டு வழக்கு, தேசத்துரோக வழக்கு, கொடுங்குற்றம் இப்படி அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.

இது போன்றவர்களை கழித்து விட்டு பட்டியலை தயா ரித்து வருகிறோம்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார்.

அதற்காக- இந்த அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் ரகு பதி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img