கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. அதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் நேற்று மாலை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், தி.மு.க. சட்ட நிபுணர் மூத்த வழக்கறிஞர் கணேஷ்குமார், கூடுதல் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.



